இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் திக்வெல்லவின் சாதனை

இலங்கை கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரான நிரோஷன் திக்வெல்ல, அதிக இன்னிங்சுகளில் பூச்சியம் ஓட்டம் பெற்ற முதலாவது வீரர் என்ற சாதனை படைத்தார்.

SL-Cricket-Team

கடந்த 2014 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணிக்கு நிரோஷன் திக்வெல்ல அறிமுகமானார். தனது கவர்ச்சியான துடுப்பாட்ட முறை மூலம் தேர்வாளர்களை தன்பக்கம் ஈர்த்த திக்வெல்ல மூன்று வகைப் போட்டிகளிலும் இலங்கையின் நிரந்தரத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக மாறினார்

இந்நிலையில் தற்போது டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 என அனைத்தையும் சேர்த்து 43 போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர் இப்போட்டிகள் மூலம் இதுவரை 50 இன்னிங்சுகளில் டக் அவுட் ஆனவர் என்ற சாதனையை பெற்றுள்ளார்.
இதற்கு முன்னர் இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் ப்ரிஜேஷ் பட்டேல் 31 போட்டிகளில் பங்கு பெற்று 47 இன்னிங்சுகளில் இந்த சாதனையை பெற்றிருந்தார். தற்போது அச்சாதனையை திக்வெல்ல முறியடித்துள்ளார்.