மலிங்கா வீட்டில் வெற்றியை கொண்டாடிய இந்திய வீரர்கள்

மலிங்கா வீட்டில் வெற்றியை கொண்டாடிய இந்திய வீரர்கள்

கொழும்பு:

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வந்தது. சொந்த மண்ணில் இலங்கையை புரட்டியெடுத்து வரும் இந்திய அணி முதல் 3 ஆட்டங்களில் முறையே 9 விக்கெட், 3 விக்கெட், 6 விக்கெட் வித்தியாசங்களில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி விட்டது. இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றது.

இதைத் தொடர்ந்து இலங்கை அணியின் பொறுப்பு கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான லசித் மலிங்கா தனது வீட்டில் இரு அணிகளுக்கும் இரவு விருந்து அளித்தார். இதில் கலந்து கொண்ட இந்திய வீரர்கள் நிகழ்ச்சியில் எடுத்த படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர்.

தவான் மற்றும் ரோஹித் ஷர்மா இலங்கை நண்பர்களுடன் இரவு உணவு உண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாக டுவிட் செய்துள்ளனர்.