இலங்கையுடனான 3-வது ஒருநாள் போட்டி: இலங்கை வீரர் சன்டிமால் காயம்

இலங்கையுடனான 3-வது ஒருநாள் போட்டியில் இலங்கை வீரர் தினேஷ் சன்டிமால் 25 ரன்னில் பேட் செய்து கொண்டிருந்த போது, ஹர்திக் பாண்ட்யா வீசிய ஷாட்பிட்ச் பந்து அவரது வலதுகையை பதம் பார்த்தது. வலியால் துடித்த அவர் முதலுதவி சிகிச்சை பெற்றுக்கொண்டு தொடர்ந்து விளையாடினார். 36 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறிய அவர் அதன் பிறகு பீல்டிங் செய்ய வரவில்லை.

பரிசோதனையில் கை பெருவிரலில் நூலிழை அளவுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் தொடரில் எஞ்சிய போட்டிகளில் அவர் விளையாடமாட்டார்.