சிறைச்சாலை படுகொலை பற்றி எனக்கு எதுவும் தெரியாது

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் நடந்த பட்டியலிடப்பட்ட படுகொலை சம்பந்தமாக தனக்கு எதுவும் தெரியாது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

20-1489991182-gotabaya-rajapaksa--11-600

எவ்வாறாயினும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணை அறிக்கையில், சிறைச்சாலைக்குள் நடத்தப்பட்ட படை நடவடிக்கை பற்றி கோத்தபாய ராஜபக்ச அறிந்திருந்தாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே தனக்கு எதுவும் தெரியாது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கூறியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது