காதலனுடன் சேர்ந்து கணவனை கொல்ல திட்டம் தீட்டிய பத்தினி ..!

பெங்களூரு காடுகோடி பகுதியை சேர்ந்தவர் சோமசேகர். தொழிலதிபரான இவரது மனைவி சுதா. காண்போரை சுண்டி இழுக்கும் அழகு. இவருக்கு திருமணத்திற்கு முன்பே அருண் என்பவருடன் காதல் இருந்தது. விதியின் வசத்தால் சோமசேகருடன் திருமணம் நடந்தது.
 K-F
ஆனாலும் காதலனை மறக்க முடியாமல் தவித்து வந்தார். இதனால் சோமசேகருடன் குடும்பம் நடத்தியதை விட காதலன் அருணுடன் படுக்கையில் கிடந்ததே அதிகம். எனவே கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் சொத்தை தன் பெயருக்கு எழுதி கொடுக்க வேண்டும் என பிடிவதம் பிடித்து வந்தார்.
இந்த நிலையில் வழக்கம் போல சண்டை போட்ட சுதா சமீபத்தில் தாய் வீட்டிற்கு சென்றார். அப்போது சுதா அவரது செல்போனை கணவன் வீட்டிலேயே விட்டு சென்றிருந்தார். சோமசேகர் அந்த செல்போனை எதேச்சையாக எடுத்து சோதித்து பார்த்தார். அதில் சுதா தனது காதலருடன் செல்போனில் பேசிய சுமார் 400க்கும் மேற்பட்ட உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டு இருந்தது. அதனை கேட்ட சோமசேகர் அதிர்ச்சி அடைந்து விட்டார். அதில் சுதா, நாம் எனது கணவனை கொன்று விடலாம்.
அதன் பிறகு சொத்துகள் எனது பெயருக்கு வந்து விடும். பின்னர் நாம் இருவரும் உல்லாசமாக இருக்கலாம் என பேசி இருந்தார்கள். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சோமசேகர் எச்சரிக்கையுடன் இருந்திருக்கிறார். ஆனாலும் மறுநாளே அவர் மீது கொடூர தாக்குதல் நடந்திருக்கிறது. இதில் சோமசேகர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளார். ஆனால் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சுதாவும், அருணும் தலைமறைவாகி விட்டனர். இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.