கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்கம் கடத்திய இந்தியர்கள்

download (15)தங்கத்தை இரகசியமான முறையில் தமது உடலில் வைத்து மறைத்து வெளிநாட்டுக்கு கடத்திச் செல்ல முயற்சித்த மூன்று இந்தியர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைத் தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே சந்தேகநபர்கள் தங்கத்தை மறைத்து வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களிடம் இருந்து 117 கிராம் தங்கம் பறிமுதல் செய்த பொலிஸார், இவர்களை மேலதிக விசாரணைகளுக்காக சுங்க திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.