இரண்டாவது டெஸ்ட்: இங்கிலாந்து வெற்றிக்கு 474 ரன்களை இலக்காக நிர்ணயித்தது தென்னாப்பிரிக்கா

இரண்டாவது டெஸ்ட்: இங்கிலாந்து வெற்றிக்கு 474 ரன்களை இலக்காக நிர்ணயித்தது தென்னாப்பிரிக்கா

நாட்டிங்காம்:

இங்கிலாந்து – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடந்து வருகிறது.

போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் 335 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து 205 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் ஜோரூட் 75 ரன்னும், பேர்ஸ்டோல் 45 ரன்னும் எடுத்தனர்.

130 ரன் முன்னிலையில் இண்டாவது இன்னிங்சை விளையாடிய தென்னாப்பிரிக்கா இரண்டாம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 75 ரன் எடுத்து இருந்தது. மூன்றாவது நாளில் தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்கா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

தென்னாப்பிரிக்கா சார்பில் எல்கர் 50 ரன்களும், ஆம்லா 87 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். டு பிளெசிஸ் 63 ரன்களும், பிலாண்டர் 42 ரன்களை எடுத்த நிலையில் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இரண்டாவது இன்னிங்சில் 104 ஓவர்களை சந்தித்த தென்னாப்பிரிக்கா அணி 9 விக்கெட்களை இழந்து 343 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது.

இதுவரை தென்னாப்பிரிக்கா 473 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில் இங்கிலாந்து அணி 474 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி வருகிறது.