இலங்கை அணியின் புதிய தலைவர் இவர் தான்.

சிம்பாப்வே அணியுடனான ஒருநாள் தொடரை சொந்த மண்ணில் 3-2 என்ற அடிப்படையில் தோல்வியுற்றதை அடுத்து இலங்கை அணியின் தலைவராக இருந்த எஞ்சலோ மெதிவ்ஸ் அணியின் தலைமை பதவியில் இருந்து இராஜினாமா செய்து இருந்தார்.

இதன் பின் சிம்பாப்வே அணியுடனான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பிக்க உள்ள நிலையில் இலங்கை அணியின் தலைமை பதவி யாருக்கு என்ற பெரியதோர் கேள்வி எழுந்து இருந்தது. அநேகமாக உபுல் தரங்க அல்லது தினேஷ் சந்திமாலுக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இலங்கை அணியின் தலைமை பதவி தினேஷ் சந்திமாலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இன்று காலை ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் தனது இராஜினாமாவை மக்களுக்கு மெதிவ்ஸ் தெரிவிக்க உள்ள நிலையில் புதிய தலைவராக தினேஷ் சந்திமால் நியமிக்கப்பட்ட செய்தி இலங்கை கிரிக்கட் சபையால் உத்தியோகபூர்வமாக அறிக்கையில் வெளியிடப்பட உள்ளது.