150 கிலோ க.அட்டை மீட்பு யாழ்ப்பாணத்தில் இருவர் கைது!!

விற்பனைக்காக கொண்டு செல்ல முயற்சிக்கப்பட்ட 150 கிலோ கடல் அட்டை நேற்றைய தினம் யாழ்.பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டதுடன் இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாச்சிக்குடா முழங்காவெளிப் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களே யாழ். பண்ணை பகுதியில் வைத்து நேற்றைய தினம் அதிகாலை வேளையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கடல் அட்டைகள் தீவகத்தில் பிடிக்கப்பட்டு நாச்சிக்குடாவிற்கு விற்பனைக்காக கொண்டு செல்ல முயற்சிக்கப்பட்ட வேளை குறித்த நபர்களை பண்ணை பாலத்தடியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்போது ஏறத்தாழ 150 கிலோ உடைய 668 கடல் அட்டைகள் 3 பரல்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. இவை பல இலட்சம் ரூபா பெறுமதியானவை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கடல் வள சட்டத்தின் பிரகாரம் கடல் அட்டைகள் பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளதும் தண்டனைக்குரிய குற்றமும் என்பது குறிப்பிடத்தக்கது.