தலைவா நீ வாழ்த்தியது கடவுளே வாழ்த்தியதுபோல இருக்கிறது: ராஜமௌலி பெருமிதம்

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த ‘பாகுபலி-2’ படம் 3 நாட்களை கடந்தும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு படக்குழுவினரை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

‘பாகுபலி-2’ படத்தை பார்த்த பல்வேறு பிரபலங்களும் படக்குழுவினருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் ரஜினியும் இந்த படத்தை பார்த்துவிட்டு, படக்குழுவினரையும் இயக்குனர் ராஜமௌலியையும் பாராட்டியிருந்தார். ‘பாகுபலி-2’ படம் இந்தியாவின் பெருமை. கடவுளின் குழந்தையான ராஜமௌலிவுக்கும் அவரது குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்திருந்தார்.

ரஜினியின் பாராட்டு ராஜமௌலிக்கும், படக்குழுவினருக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ரஜினி பாராட்டியது கடவுளே பாராட்டியதுபோல் இருப்பதாக ராஜமௌலி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ‘தலைவா, கடவுளே என்னையும் என் குழுவையும் வாழ்த்தியதுபோல் இருக்கிறது. உங்கள் வாழ்த்துக்கள் முன்னாள் எதுவும் பெரிதாக இருக்க முடியாது’ என்று புகழ்ந்துள்ளார்.