டோனி தொடக்க வீரராக களம் இறக்கியதால் எனது கேரியர் மாறியது: ரோகித் சர்மா

இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்த டோனியின் கேப்டன் கிரிக்கெட் வாழ்க்கை நேற்று முன்தினம் மும்பையில் நடைபெற்ற இங்கிலாந்து லெவன் அணிக்கெதிராக இந்தியா ‘ஏ’ அணி மோதிய ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது.

அவர் தலைமையின் கீழ் விளையாடியதை அனைத்து வீரர்களும் நினைவு கூர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் ரோகித் சர்மா டோனி பற்றி கூறுகையில் ‘‘தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும் என்ற முடிவு எனது கிரிக்கெட் கேரியரை மாற்றியது என்று நம்புகிறேன். இந்த முடிவு டோனியால் எடுக்கப்பட்டது.

டோனி என்னிடம் வந்து நீங்கள் தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும். உங்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் சிறப்பான விளையாடுவீர்கள். உங்களால் கட் ஷாட் மற்றும் புல்ஷாட்டுகளை சிறப்பாக அடிக்க முடியும். தொடக்க வீரராக வெற்றி பெற தகுதிகள் உள்ளது அதற்குப் பின்னர்தான் நான் சிறந்த பேட்ஸ்மேன் ஆனேன். என்னுடைய சிறந்த விளையாட்டை புரிந்து கொள்வதற்கும் சூழ்நிலைக்கு ஏற்ப சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த எனக்கு உதவியாக இருந்தது’’ என்றார்.