பஞ்சாப் அணிக்கு சேவாக் தலைமை பயிற்சியாளர் இல்லை: புது நபரை தேடுகிறது

ஐ.பி.எல். தொடரில் விளையாடும் அணிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ஒன்று. அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் சஞ்சய் பாங்கர். கடந்த சில நாட்களுக்கு முன் அவர் தனது தலைமை பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதனால் அந்த அணியின் ஆலோசகராக இருக்கும் சேவாக், தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பஞ்சாப் அணியின் உரிமையாளர்கள் இந்திய உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ஒருவரை தலைமை பயிற்சியாளர் பதவிக்கு தேடிவருகிறது. மும்பையில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளதால் சேவாக் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கமாட்டார் என்பது உறுதியாகிவிட்டது.

கடந்த இரண்டு சீசனிலும் பஞ்சாப் அணி மிகப்பெரிய சரிவை சந்தித்தது. இதனால் புதிய பயிற்சியாளரை தீவிரமாக தேடிவருகிறது.