சளிப்பிரச்சினைக்கு தீர்வு தரும் கருந்துளசி!

இப்பொழுதெல்லாம் குளிர்காலம் தொடங்கி விட்டது. இதனால் குளிரான உணவுகள் எதுவும் உட்கொள்ளாமலே சளி பிடித்துக் கொள்ளும்.

இதற்கா அடிக்கடி வைத்தியரை அணுக வேண்டிய அவசியம் இல்லை.

இதனால் பணசெலவும், பக்க விளைவுகளுமே எஞ்சும்.

இந்த பிரச்சினைக்கு தீர்வு பெறுவதற்கு கருந்துளசியை பயன்படுத்தலாம்.

சிறிதளவு கருந்துளசியை எடுத்து பசும்பால் போட்டு காய்ச்சி குடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஒவ்வாமையால் ஏற்படுகின்ற சளித் தொல்லை நீங்கும்.

நீரில் இட்டு நன்கு கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் சைனஸ் தொல்லையால் ஏற்படும் சளிக்கு தீர்வு கிடைக்கும்.

அடிக்கடி சளி பிடிக்காமல் இருக்க ஐந்து அல்லது பத்து கருந்துளசி இலைகளை ஒரு லீட்டர் நீரில் ஊறவைத்து அந்த நீரை அருந்தி பின்னர் இலைகளை மென்று சாப்பிட வேண்டும்.

தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் 3, 4 இலைகளை சாப்பிட்டு வந்தால் கிருமித் தொற்றினால் ஏற்படும் சளித்தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

மேலும் சளி தொல்லையை அடியோடு கட்டுப்படுத்த நமது அன்றாட உணவிலும் மாற்றத்தை ஏற்படுத்தினால் பலன் கிடைக்கும்.

அதன்படி, மஞ்சள், மிளகு, சிற்றரத்தை, பூண்டு, மல்லி, சின்ன வெங்காயம் போன்றவற்றை உணவில் சேர்க்க பலன் கிட்டும்.