ஐரோப்பியர்களால் இலங்கைக்கு கிடைத்த நன்மை!

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமையால் அதிகளவான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மாதத்தில் இலங்கை வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 16 வீதத்தினால் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

நவம்பர் மாதத்தில் இந்த நாட்டிற்கு வருகை தந்துள்ள சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 217ஆம் ஆகும். இந்த நூற்றுக்கு 16 வீத அதிகரிப்பாகும் என குறிப்பிடப்படுகின்றது.

விசேடமாக சீனா மற்றும் மேற்கு ஐரோப்பா நாடுகளின் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை சுட்டிக்காட்டும் அளவிற்கு அதிகரித்துள்ளதாக சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

வருடத்தின் முதல் 11 மாதத்தினுள் நாட்டிற்கு வருகைத்தந்துள்ள சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 1.82 மில்லியனாகும்.

அது கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 14.7 வீத அதிகரிப்பென சுட்டிக்காட்டப்படுகிறது.