சாப்பிடுவதற்கு முன் கல் உப்பு கலந்த எலுமிச்சை சாறு சாப்பிட வேண்டும்: ஏன் தெரியுமா?

உணவுதான் நம் வாழ்க்கைக்கு ஆதாரம். நல்ல சத்தான உணவை சாப்பிடுவதால் வளமான வாழ்க்கையை பெறலாம். நீங்கள் சாப்பிடும்போது செய்யக் கூடாத தவறுகள் என்ன என்பது பற்றி பார்ப்போம்.

ஆரோக்கியமான உணவை சாப்பிட உங்களுக்கு ஆசை. இருந்தாலும் எதோ உணவை எடுத்தோம், சாப்பிட்டோம் என்பது முறையான உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. உணவு சாப்பிடும்போதும் பல விஷயங்களை நாம் கவனிப்பது அவசியம். சிலருக்கு என்ன சாப்பிட்டாலும் உடலில் ஒட்டாது என்பார்கள்.

இன்னும் சிலருக்கு சிறிது சாப்பிட்டாலும் உடல் குண்டாகிவிடும். இதற்கு காரணம் நாம் உணவை தவறான முறையில் அணுகுவதால்தான். சாப்பாட்டு விஷயத்தில் நீங்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை .

பசி எடுத்தால் சாப்பிடுங்கள்:

பசி நன்றாக எடுத்த பின்புதான் சாப்பிடவேண்டும். அப்போதுதான் உணவை கரைக்கும் நொதிகள் நன்றாக வேலை செய்யும். சக்தியும் கிடைக்கும். இல்லையெனில் அஜீரண கோளாறில் சிரமப் படவேண்டும்.

உறுப்புகளுக்குள் ஒழுங்கை கொண்டு வாருங்கள். நீங்கள் சரியான குறிப்பிட்ட நேரத்த்திற்கு சாப்பிட்டால் அந்த கட்டுப்பாட்டை உங்கள் உறுப்புகளும் பின்பற்றும். இதனால் வியாதி என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. கண்ட நேரத்திற்கு சாப்பிட்டு உறுப்புகளில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்.

சரியான காம்பினேஷனில் சாப்பிடுங்கள்:

தயிரை சாப்பிட்ட பின் பால் குடிப்பதோ, அல்லது பாலை குடித்தவுடன் புளித்த பழங்கள் சாப்பிடுவது, இப்படி உணவை தவறான காம்பினேஷனுடன் எடுத்துக் கொண்டால் அஜீரணம் உண்டாகும். அதோடு வயிறு சம்பந்தபட்ட பாதிப்புகள் உண்டாக்கும்.

கல் உப்பு கலந்த எலுமிச்சை சாறு சாப்பிடுவதற்கு முன்:

உணவை சாப்பிடுவதற்கு இஞ்சியை எலுமிச்சை சாறில் தட்டி, அதில் ஒரு சிட்டிகை கல் உப்பை போட்டு குடித்தால் ஜீரண மண்டலம் நன்றாக வேலை செய்யும். இதனால் உணவு நன்றாக செரிக்கும்.

இரவுகளில் என்ன சாப்பிடுகிறீர்கள்:

இரவுகளில் சில்லிடும் ஐஸ் பானங்கள், ஐஸ் டீ, ஆகிய்வற்றை தவிர்க்க வேண்டும். பொதுவாக இரவில் குளிர்ச்சியான பண்டங்கள் செரிமான பிரச்சனையை உண்டாக்கும். தூக்கமின்மையும் ஏற்படுத்தும்.

நீரை எப்போது எப்படி குடிக்க வேண்டும்

நீங்கள் அதிக தாகத்துடன் இருந்தால் சாப்பிடக் கூடாது. அதுபோல் அதிக பசியுடன் இருக்கும்போது நீர் அருந்தக் கூடாது. உணவுகளுக்கு இடையே நீர் அருந்தக் கூடாது. வேண்டுமானால், உணவு அடைக்காமலிருப்பதை தவிர்க்க ஒரு சிப் அளவு வெதுவெதுப்பான நீரை அவ்வப்போது குடிக்கலாம்.