சந்தேக நபர்களிடம் எவ்வாறு விசாரணை செய்வது என்பது குறித்து பொலிஸ் மா அதிபர் விளக்கம்

சந்தேக நபர்களிடம் எவ்வாறு விசாரணை செய்வது என்பது குறித்து பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர விளக்கம் அளித்துள்ளார்.

பொலிஸாரினால் கைது செய்யப்படும் சந்தேக நபர்களிடம் எவ்வாறு விசாரணை செய்யப்பட வேண்டும் என்பது தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள், பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் உத்தியோகத்தர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டு இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களை எவ்வாறு விசாரணை செய்வது என்பது குறித்து பொலிஸ் மா அதிபரினால் நடத்தப்பட்ட கருத்தரங்கில், 472 பொலிஸ் பரிசோதகர்கள், 42 பொலிஸ் அத்தியட்சகர்கள், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், 110 துணைப் பொலிஸ் அத்தியட்சகர்கள் பங்கேற்றுள்ளனர்.

சந்தேக நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படும் முறைமை குறித்து அடிக்கடி பொலிஸ் தலைமையகத்திற்கு கிடைக்கும் முறைப்பாடுகள் காரணமாக இவ்வாறு விசாரணை நடத்தப்பட உள்ளது.

இதேவேளை, பொலிஸ் விசாரணைகளின் போது சித்திரவதைகள் தாக்குதல்கள் இடம்பெறாது என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.