இதற்காகவே இத்தனை வருடங்கள் காத்திருந்த இளையதளபதி

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள ‘பைரவா’ படத்தில் அவர் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. ஒன்று சிட்டி வாலிபர் மற்றொன்று நெல்லை இளைஞர்.

சிட்டி வாலிபர் கேரக்டர் அவர் வழக்கமாக ஏற்று நடித்ததுதான். ஆனால் முதல்முறையாக நெல்லைத்தமிழ் பேசி நடித்துள்ள விஜய், முதன்முதலாக நெல்லைத்தமிழில் டப்பிங்கும் செய்துள்ளாராம்

நெல்லைத்தமிழில் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று இத்தனை வருடங்களாக விஜய் காத்திருந்ததாகவும், முதன்முதலில் நெல்லைத்தமிழ் கேரக்டர் கொடுத்த பரதனுக்கு அவர் நன்றி சொன்னதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.