இவர் மனசு யாருக்கு வரும்! ரசிகரின் உயிரைக் காப்பாற்ற போராடும் பாகிஸ்தான் அணித்தலைவர்

பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைவர் மிஸ்பா உல் ஹக் தனது ரசிகர் ஒருவரின் மருத்துசெலவுக்காக நிதி திரட்டி வருகிறார்.

ரோஹன் என்ற 16 வயது சிறுவனுக்கு இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதயத்தில் சிறிய துளை ஏற்பட்டுள்ளதால் அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலை அறிந்த மிஸ்பா அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று களத்தில் இறங்கியுள்ளார்.

அறுவை சிகிச்சைக்கு ரூ.3 லட்சம் வரை செலவு ஆகும் என்பதால் இந்த செலவுக்கான பாதித் தொகையை அவர் தயார் செய்துவிட்டார்.

மீதி பணத்திற்காக அவர் தன்னுடைய துடுப்பாட்ட மட்டை மற்றும் கிரிக்கெட் உடைகளை ஏலம் விட உள்ளதாக கூறப்படுகிறது. தவிர, தன்னுடைய குட்டி ரசிகரின் சிகிச்சைக்கு நிதியும் திரட்டி வருகிறார்.

2015ம் ஆண்டு உலகக்கிண்ணத் தொடரின் போது மிஸ்பா, ரோஹனை சந்தித்திருக்கிறார். தற்போது மிஸ்பா போட்டிக்காக அவுஸ்திரேலியா சென்றிருப்பதால் ரோஹனை சந்திக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.