பிரான்ஸ் நாட்டில் ரூ.45 கோடி மதிப்புள்ள உள்ளாடையை பிரபலப்படுத்த நடிகை ஒருவர் அதனை அணிந்துக்கொண்டு மேடையில் தோன்றிய நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அமெரிக்க நாட்டை சேர்ந்த Victoria’s Secret என்ற நிறுவனம் பெண்களின் உள்ளாடைகளை வடிவமைத்து விற்பனை செய்வதில் முதலிடம் வகித்து வருகிறது.

இந்நிறுவனம் அண்மையில் வடிவமைத்துள்ள உள்ளாடை(Bra) மரகதம், வைரம் உள்ளிட்ட விலையுயர்ந்த கற்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டது.

இந்த உள்ளாடையை மக்களிடையே பிரபலப்படுத்தும் நோக்கில் பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பிறந்த கருப்பின நடிகையும் மொடலுமான Jasmine Tookes என்பவர் இதனை அணிந்துக்கொண்டு பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளார்.

மேலும், இந்த உள்ளாடையின் விலை 3 மில்லியன் டொலர்(44,83,05,000 இலங்கை ரூபாய்) என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.