மஹிந்த, சந்திரிகாவுடன் பேச்சு நடத்தவுள்ள ரணில்

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ச ஆகியோரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விரைவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

புதிய அரசியலமைப்பு விவகாரம் மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தே பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் அரசியலமைப்பு நிர்ணய சபையின் பிரதான வழி நடத்தல் குழுவின் தலைவர் என்ற வகையிலேயே பிரதமர் இவ்வாறு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ச ஆகியோரை சந்திக்கவுள்ளார்.

இந்த பிரதான வழி நடத்தல் குழுவின் முக்கிய அமர்வு நேற்றைய தினம் பாராளுமன்ற கட்டட தொகுதியில் சுமார் இரண்டு மணிநேரம் நடைபெற்றது.

இதன்போது இவ்வாறு முன்னாள் ஜனாதிபதிகளுடன் கலந்தாலோசனை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தற்போது சீனா சென்றுள்ள நிலையில் அவர் நாடு திரும்பியவுடன் பிரதமர் அவருடன் பேச்சு நடத்தவுள்ளார்.