பெற்ற மகளை ஆண் நண்பர்களுக்கு விருந்தாக்கிய தாய்

அவுஸ்திரேலியாவில் தாய் ஒருவர் தனது மகளை, ஆண் ஒருவர் பலாத்காரம் செய்வதற்கு அனுமதி வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, 37 வயதுடைய இத்தாய் தனது ஒழுக்கமற்ற பழக்கவழக்கங்களால் தனது வாழ்க்கையை சீரழித்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல் தனது 16 வயது மகளின் வாழ்க்கையையும் சீரழித்துள்ளார்.

இவர், தனது மகளின் முன்னிலையில் வைத்தே, பிற ஆண்களுடன் தவறான முறையில் நடந்துகொண்டுள்ளார். அதுமட்டுமின்றி தனது கண் முன்னிலையிலேயே மகளை அந்த ஆண்கள் கூட்டம், உடல் ரீதியாக தொந்தரவு செய்வதை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.

இதன் ஒரு கட்டமாக, இவர் பழகி வந்த ஆண்களில் ஒருவர் தனது மகளை பலாத்காரம் செய்ய முயற்சிக்கையில், அதனை தடுக்காமல் அந்த நபருக்கு உதவி செய்துள்ளார்.

தனது இளம் வயது மகளின் வாழ்க்கையை சீர்குலைத்த குற்றத்திற்காக இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு Southport நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில், Brisbane- இல் உள்ள பெண்கள் சிறையில் 6 மாதம் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ள இவரின் மனுவினை விசாரித்த நீதிபதி, எக்காரணம் கொண்டு தனது மகளை சந்திக்கவோ, அவளுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளவே கூடாது என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியுள்ளார்.