நான் செவ்வாய்கிரக வாசி! ஏலியன்கள் இப்படித்தான் இருப்பார்கள்- பரபரப்பை கிளப்பும் பெண்

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் வசித்து வரும் Lea Kapiteli என்ற யுவதி தான் மனித இனத்தை சேர்ந்தவரல்ல எனக் கூறி அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளார்.

22 வயதான இந்த யுவதி தான் செவ்வாய் கிரகவாசிகளின் மரபணுவை கொண்ட கலப்பினம் எனக் கூறியுள்ளார்.

செவ்வாய் கிரகத்தில் மட்டுமல்லாது அண்டவெளியில் உயிர்கள் இருப்பதாகவும் அவர்கள் பூமியில் உள்ள மனிதர்களுடன் இணைந்து கலப்பினங்களை உருவாக்கி வருவதாகவும் யுவதி தெரிவித்துள்ளார்.

தனது பிறப்பு பற்றி கருத்து வெளியிட்டுள்ள யுவதி, தனது தாய் நித்திரையில் இருந்த போது, செவ்வாய் கிரகவாசிகள் தன்னை பெற்றெடுக்க தேவையான அடிப்படை மரபணுவை தனது தாயின் வயிற்றில் வைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், தமது மகள் சிறிய வயதில் இருந்து வித்தியாசமானவராக இருந்தார் என யுவதியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

தனக்கு இணையான வயதுடைய நண்பர்கள் நண்பிகளுடன் பழகுவதை தவிர்த்து வந்ததாகவும் சிறு வயது முதல் வேறு உலகங்கள் பற்றி பேசி வந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர.

எவ்வாறாயினும் தன்னை செவ்வாய் கிரக பெண் எனக் கூறும் இந்த யுவதி செவ்வாயில் வாழும் உயிரினத்தின் படங்களை வரைந்துள்ளார்.

ஓவியங்களை வரைந்தால், அவர் ஓவியம் வரைய கற்றுக்கொண்டவர் அல்ல என்பதும் முக்கியமானது.ealiane1

யுவதி தியான நிலையில், தனது உலகத்திற்கும் செல்லும் சந்தர்ப்பங்களை ஓவியமாக வரைந்துள்ளார்.

அண்டவெளி முழுவதும் உயிரினங்கள் இருப்பதாகவும் அவர்கள் தமது இனத்தை பெருக்க கலப்பு முறையை பயன்படுத்தி வருவதாகவும் யுவதி கூறுகிறார்.

மிகவும் முன்னேற்றமான டெலிபதி மூலம் அந்த உயிரினங்கள் அண்டவெளி முழுவதும் மனதால் பயணம் செய்கின்றனர் எனவும் தானும் தினமும் சில மணிநேரம் மனதால், செவ்வாய் கிரகத்திற்கு சென்று வருவதாகவும் யுவதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அண்டவெளியில் இருக்கும் தனக்கு பிடித்த இடங்களும் தான் இவ்வாறு சென்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.ealieance2

விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆய்வு செய்து கண்டுபிடித்த வேறு கிரகங்கள் பற்றி இந்த யுவதி சிறிது நேர நித்திரையின் பின் தெளிவாக விபரிப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

யுவதியின் அசாதாரண நிலை காரணமாக அவர் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். எனினும் அவரது உடல் நிலையில் எந்த பாதிப்பும் இல்லை என பரிசோதனைகளில் கண்டறியப்பட்டது.

மேலும் யுவதியின் அதி சக்தி வாய்ந்த மனநிலை தொடர்பிலும் பரிசோதனையாளர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

அப்படியான இந்த யுவதி கூறுவது போல் செவ்வாய் கிரகத்தில் வாழும் முன்னேறிய உயிரினங்கள் பூமியில் லட்சக்கணக்கான கலப்பினங்களை உருவாக்க போவது உண்மையா?. இந்த யுவதி கூறுவது போல் எதிர்காலத்தில் உலகத்திற்கு இது தெரியவரலாம்!.ealiance3