பிரான்ஸ் பாரிசில் தமிழர் ஒருவர்மீது வாள்வெட்டு! (காணொளி இணைப்பு)

பாரிசில் உள்ள தமிழர்கள் செறிந்துவாழும் பிரதேசத்தில் ஈழத்தமிழர் ஒருவர் மீது இனந்தெரியாத நபர்களால் வாள்வெட்டு தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.

குறித்தநபர் மாவீரர்நாள் துண்டுப்பிரசுரங்களை லாச்சப்பல் பகுதியில் விநியோகித்துக்கொண்டிருந்தவேளை அங்கு வந்த இனந்தெரியாத நபர்கள் இவர்மீது வாள்வெட்டு தாக்குதலை நடாத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இதில் காயமடைந்தவர் ஜெயக்குமார் என அழைக்கப்படும் நபராவார்.தற்போது குறித்த பிரதேசத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு காயமடைந்த நபர் உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளார்.