இலங்கை மக்களின் இல்லங்களில் மணக்கும் இந்த குழம்பினை ருசித்திருக்கிறீர்களா?

இலங்கையில் தென் பகுதி சிங்களவர்கள் மத்தியில் மிகவும் விரும்பப்படும் மிகவும் சுவையான குடம் புளி மீன் குழம்பு (( எம்புல் தியல் மீன் கறி) இதுவாகும்.

இந்த குழம்பை தயாரிக்க மாசி மீன் அழைக்கப்படும் டுனா மீன் பயன்படுத்துவார்கள்.

இந்த அருமையான சுவையுடைய மீன் குழம்பை சிங்களவர்கள் மட்டுமல்ல தமிழர்களும், இலங்கை செல்லும் சுற்றுலாப் பயணிகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

 

தேவையான பொருட்கள்

வெட்டி சுத்தம் செய்த மாசி மீன் துண்டுகள் 1/2 கிலோ

குடம்புளி 6 துண்டுகள்

மிளகு தூள் 3 டீ ஸ்பூன்

உப்பு 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் 1 டீ ஸ்பூன்

வினிகர் (வினாகிரி) 1 டீஸ்பூன்

செய்முறை

சிறிய பாத்திரத்தில் குடம்புளியை ஒரு ஸ்பூன் வினிகர் மற்றும் சிறிளவு நீரை மூழ்கும் அளவுக்கு இட்டு ஊறவைக்க வேண்டும்

பின்னர் மிக்சியில் அரைத்து கொள்ள வேண்டும். பட்டு போல் அரைத்த இந்த பேஸ்ட் மற்றும் மூன்று டீ ஸ்பூன் மிளகு தூள், உப்பு, மஞ்சள் சேர்த்து பிரட்டி சுமார் ஒரு மணிநேரம் வைக்க வேண்டும்.

பிறகு இந்த கலவையை வாணலியில் அரை கப் நீர் விட்டு கலந்து வேக வைக்க வேண்டும்.

இதன் பின்னர் மீன் துண்டுகளை போட்டு உடையாமல் திருப்பி விட வேண்டும். சுமார் 5 நிமிடங்கள் கொதித்த பின் இறக்க வேண்டும்.

இறக்கி பிறகும் சாப்பிடலாம். தேவையான ஆறிய பின்னர் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தும் சாப்பிடலாம். இது நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.

நீங்களும் உங்கள் வீட்டில் இருந்த மீன் குழம்பை சமைத்து ருசித்து பாருங்கள்.