அவுஸ்திரேலியாவில் புகலிடம் பெற்ற இலங்கைத் தமிழர் திடீர் மரணம்!

இலங்கையிலிருந்து புகலிடம் கோரும் நோக்கில் ‘மெராக்’ கப்பலில் அவுஸ்திரேலியா சென்று, பின் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டு, அங்கு குடியமர்ந்த அஜிதன் யுவராஜன்(24) என்ற இளைஞர் திடீர் மரணமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த செய்தியை அவுஸ்திரேலிய ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.

சிட்னியில் வசித்து வந்த இவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதாகவும் இதுவே அவர் திடீர் மரணமடைவதற்குக் காரணம் எனவும் அவரது நண்பரொருவர் குறித்த ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் அஜிதனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாகவும் அப்போது அவருடன் யாரும் இருந்திருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அஜிதன் இயற்கை மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மெற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அஜிதனின் உறவினர்கள் யாரும் அவுஸ்திரேலியாவில் இல்லாத நிலையில் ,அவரது உடலை இலங்கைக்கு கொண்டுசெல்வதா அல்லது அவரது உறவினர்களை இங்கு வரவழைப்பதா என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.