தமிழக மக்களுக்கு நற்செய்தி…ஜெயலலிதா இன்று இரவு மாற்றப்படுகிறார்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் 22ம் திகதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் எம்டிசிசியு வார்டுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதா இன்று இரவு 2வது தளத்தில் உள்ள சிறப்பு வார்டுக்கு மாற்றப்படுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

2வது தளத்தில் உள்ள எம்டிசிசியு வார்டில் சிகிச்சை பெற்ற வந்த முதல்வரின் உடல்நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து சிறப்பு வார்டுக்கு மாற்றப்படுவதாக கூறப்படுகிறது.

செப்டம்பர் மாதம் 22ம் திகதி அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா தொடர்ந்து 42வது நாளாக சிகிச்சை பெற்று வருவது நினைவுக்கூரத்தக்கது.

இந்நிலையில், அவர் எப்போது குணமடைந்து வீடு திரும்புகிறார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.