ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு மற்றும் ரிலீஸ் தேதியின் ஸ்பெஷல் அப்டேட்..!!

இயக்குனர் சிறுத்தை சிவா தனது இயக்கத்தில் முதன் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இயக்கி வரும் படம் அண்ணாத்த.

இப்படத்தில் தலைவர் ரஜினியுடன் இணைந்து நடிகைகளான குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

மேலும் காமெடி கதாபாத்திரங்களில் சூரி மற்றும் சதிஷ் முதன் முறையாக ரஜினியுடன் இணைந்து நடித்து வருகிறார்கள்.

இந்த பிரமாண்ட படத்தை மாபெரும் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

சமீபத்தில் ரஜினி இப்படத்தை விட்டு விலகி விட்டார் என பல விதமான சர்ச்சைகள் சமூக வலைதளங்களில் மிகவும் தீயாய் பரவி வந்தது.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக நீன்றுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் சென்னையில் உள்ள பரபல இடத்தில் பிரமாண்ட செட்டுடன் நடைபெற்ற இருக்கிறதாம்.

மேலும் இந்த படத்தை வரும் 2021ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு அன்று வெளியிட்ட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.