குழந்தைகளை பிரசவித்த பெண்கள் பயம் இன்றி குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குங்கள்..!!

வருடம் தோறும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரம் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை தாய்ப்பால் விழிப்புணர்வு வாரமாக சிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த வருடத்திலும் நாளை முதல் தாய்ப்பால் விழிப்புணர்வு வார கருத்து மையம் சார்பாக தாய்ப்பால் விழிப்புணர்வு வாரம் சிறப்பிக்கப்படுகிறது.

தாய்ப்பாலில் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் சரியான அளவில் இருக்கிறியாது. பிறந்த குழந்தைக்கு ஆறு மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தி, மூளை வளர்ச்சி போன்றவை நல்ல நிலையில் இருக்கும்.

நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாக்கப்படும். பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகளும் தடுக்கப்படும். கொரோனா காலத்திலும் குழந்தையை பெற்றெடுத்த தாய்மார்கள் தங்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்க வேண்டும்.

தாய்ப்பால் மூலமாக கொரோனா தொற்று பரவுவது கிடையது. கொரோனா பாதிப்பு தாய்க்கு இருந்தாலும், தாயையும், சேயையும் பிரிக்க வேண்டிய அவசியம் கிடையாது. தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்னதாக கைகளை சோப்பு கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். தாய்மார்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

தாய்ப்பாலூட்டும் குழந்தையை பெற்றெடுத்த பெண்கள் தாய்ப்பால் தானமும் செய்யலாம். தங்களின் குழந்தைகளுக்கு கொடுத்தது போக எஞ்சியிருக்கும் தாய்ப்பாலை தானம் வழங்குவதால் எந்த பிரச்சனையும் கிடையாது. மேலும், பால் சுரப்பு அதிகரிக்கும்.

தானமாக பெறப்படும் தாய்ப்பால் மூலமாக தாய்ப்பால் தேவைப்படும் குழந்தைகள், குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைகள் மற்றும் குறைமாத குழந்தைகள் பலன் அடைவார்கள். தாய்ப்பால் பெற பரிசோதனைக்கு பின்னரே தாய்ப்பால் பெறப்படும். தாய்ப்பால் கொதிக்கவைத்து பதப்படுத்தப்படும் காரணத்தால், அதில் கிருமிகள் இருக்காது என்று புதுச்சேரி எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.