ஓட்டல் நிர்வாகம் செய்த காரியம்.. உயிருக்கு போராடும் 700 பேர்.. பலியான 5 வயது குழந்தை!

ஜோர்தான் நாட்டின் தலைநகராக இருக்கும் அம்மானின் வடமேற்கு பகுதியில் குழந்தை ஒன்று கெட்டுப்போன உணவை சாப்பிட்டு பலியாகியுள்ள நிலையில், மேலும் 700 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,

அம்மான் மாவட்டம் இன் அல் பாஷா என்ற பகுதியில் உணவகம் ஒன்றில் கெட்டுப்போன உணவை வினியோகித்து இருக்கின்றனர். இந்த உணவை சாப்பிட்ட 5 வயது குழந்தை ஒன்று உயிரிழந்து உள்ளது. மேலும், அந்த உணவகத்தில் சாப்பிட்ட 700க்கும் மேற்பட்டவர்கள் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

அவர்களில் பலரும் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், ஒரு சிலருக்கு லேசான காய்ச்சல் இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த பிரச்சனைக்கு காரணமாக இருந்த குறிப்பிட்ட உணவகத்தில் இறைச்சிகளை குளிரூட்டும் அறையானது சரிவர செயல்படாத காரணத்தால், உணவு பொருட்களில் ஏராளமான கிருமிகள் இருந்துள்ளது.

மேலும், உணவு தயாரிப்பு நடைபெறும் இடமானது, உணவகத்திற்கு வெளியே திறந்த வெளியில் முறையான பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படாமல் நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது. உணவகத்தில் சாப்பிட்டதால் 5 வயது குழந்தை பலியாகிய சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.