வெலிக்கடை சிறையில் மேலுமொரு கைதிக்கு கொரோனா!

வெலிக்கடை சிறைச்சாலையில் மற்றுமொரு கைதிக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் அடயாளம் காணப்பட்ட கொரோனா நோயாளியுடன் பழகியவரே இவ்வாறு தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

இதேவேளை நேற்றையதினம் இலங்கையில் 12 பேர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 580ஆக அதிகரித்துள்ளது.