கொசு இதனால் தான் ரத்தத்தை குடிக்கிறதாம்.. விஞ்ஞானிகள் வெளியிட்ட புதிய தகவல்..!

நியூஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் விஞ்ஞானிகள் ஆப்ரிக்காவில் இருக்கும் ஏடிஸ் ஈஜிப்டி கொசுக்களை ஆராய்ச்சி செய்துள்ளனர்.

அதில், ஏடிஸ் ஈஜிப்டி கொசுக்கள் ஜிகா மற்றும் டெங்கு காய்ச்சல், மஞ்சள் காய்ச்சல் போன்ற நோய்களை பரப்பும் தன்மை கொண்டதாகும்.

இந்த ஆராய்ச்சியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி, ஏடிஸ் ஈஜிப்டி கொசுக்களின் பல இனங்கள் இருக்கிறது என்றும், இதில் எல்லா இன கொசுக்களும் இரத்தத்தை குடிப்பது இல்லை என்றும் தெரிவித்துள்ளனனர்.

மேலும், பலவகை கொசுக்கள் இரத்தத்தை குடிக்காமல் பலவகை உணவுகளை சாப்பிட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கூறிய பிரிட்டன் பல்கலை. ஆராய்ச்சியாளர் நோவா ரோஸ், பல வகையான கொசு முட்டைகளை எடுத்து சோதனை செய்ததில், அவற்றின் இரத்தம் குடிக்கும் தன்மை தொடர்பாக ஆராய்ச்சி செய்து வந்தோம்.

இதில், ஏடிஸ் ஈஜிப்டி கொசுக்களின் இனங்களின் உணவு மற்றும் பழக்கவழக்கங்கள் மாறுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், அனைத்து கொசுக்களும் இரத்தத்தை குடிப்பதில்லை என்றும், வறட்சி மற்றும் வெப்பம் நிறைந்துள்ள பகுதிகளில், தண்ணீர் குறைவாக இருக்கும் பகுதியிலும் நீர் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய கொசுக்கள் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் இரத்தத்தை குடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொசுக்களின் இனப்பெருக்கம் காரணமாக வறண்ட பகுதிகளில் இரத்தத்தை குடிக்கிறது என்றும், இந்த மாற்றங்கள் பல ஆயிரம் வருடமாக மெல்ல மெல்ல ஏற்பட்டு, இப்போது இந்த சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல ஆயிரம் வருடத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் இப்போது கொசுக்களுக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தண்ணீர் பற்றாக்குறை இல்லாத இடங்களில் பானைகள் மற்றும் படுகைகளில் கூட தங்களின் இனப்பெருக்கத்தை செய்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.