நள்ளிரவு 12 மணிக்கு நடிகை ராதிகா கொடுத்த சர்ப்ரைஸ்… இன்ப அதிர்ச்சியில் சரத்குமார்!

நடிகை ராதிகா கணவரின் பிறந்தநாளுக்கு நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

நடிகர் சரத்குமார் இன்று தனது 66வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதனை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு மகனுடன் சேர்ந்து கணவரின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் ராதிகா.

அந்த போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் ராதிகா. சரத்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள நடிகை ராதிகா, மகிழ்ச்சி, உடல்நலம், பெரிய சாதனைகள் எல்லாம் கிடைக்கட்டும் என வாழ்த்தியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

https://twitter.com/realradikaa/status/1282738014532198400