தியேட்டர் திறந்ததும் முதல் படம் ரிலிஸ் இதுவா?

இந்தியர்களின் மிகப்பெரிய பொழுதுபோக்கு ஒன்றில் சினிமா நம்பர் 1 ஆக இருந்து வருகிறது. அப்படியிருக்க திரையரங்குகள் கொரொனாவால் மூடப்பட்டது.

அதுவும் திரையரங்குகள் சுமார் 100 நாட்களுக்கு மேலாக ரன் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சினிமா ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

இந்நிலையில் PVR சினிமாஸ் அரசாங்கத்திடம் திரையரங்கை சில கண்டிஷனுடன் ஓபன் செய்யலாம் என்று கோரிக்கை வைத்தனர்.

அதன்படி தற்போது திரையரங்குகள் ஆகஸ்ட் மாதம் திறக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அதுவும் ஒரு சில கண்டிஷனுடன் திரையரங்குகள் திறக்கவுள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளது.

முதற்கட்டமாக சீனியர் சிட்டிசன் மற்றும் குழந்தைகள் அனுமதிக்காமல் திறக்கலாம் என்று முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுக்குறித்து நம் தளத்திலேயே தெரிவித்து இருந்தோம், இதை தொடர்ந்து பல படங்கள் வரிசை கட்டி நிற்கிறது.

ஒரு சிலர் சூரரைப் போற்று மாதிரியான பழைய படங்களை ரிலிஸ் செய்யலாம் என கூறி வருகின்றனர்.

ஆனால் ஒரு சிலர் சிறு படங்களை ரிலிஸ் செய்யலாம் என கூறிவருகின்றனர், இதோடு பூமி, ஜகமே தந்திரம் படங்களும் ரிலிஸிற்கு ரெடியாகவுள்ளது.