இன்றைய நாளில் இந்த ராசிக்காரர்களுக்கு சனி உச்சத்தில் இருக்கும் அது எந்த ராசி தெரியுமா ? ? இதோ இன்றைய ராசிபலன் (15.07.2020)

‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் ஜூலை – 15 – ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்பு……..

27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.

மேஷம்
மேஷராசி அன்பர்களே!

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும். சிலருக்குத் தந்தைவழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். இன்று சிவபெருமானை வழிபட சிரமங்கள் குறையும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.

ரிஷபம்
ரிஷபராசி அன்பர்களே!

வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படும். அதனால் மகிழ்ச்சியே ஏற்படும். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி ஒன்று மாற்றி ஒன்று ஏதேனும் வேலை இருந்தபடியிருக்கும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். தட்சிணாமூர்த்தியை வழிபட, காரியங்கள் அனுகூலமாகும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் கிடைக்கும் செய்தி மகிழ்ச்சி தரும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம் உண்டு.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.

மிதுனம்
மிதுனராசி அன்பர்களே!

அதிர்ஷ்டகரமான நாள். இன்று நீங்கள் தொடங்கும் புதிய முயற்சி சாதகமாக முடியும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்புத் தருவார்கள். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டு. அம்பிகையை வழிபட நற்பலன்கள் கூடும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் எதிர்பார்த்த பணம் கிடைக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கடகம்
கடகராசி அன்பர்களே!

தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் பிரச்னை ஏற்படக்கூடும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். உறவினரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பப் பொறுப்புகளை முடிப்பதில் சற்று அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். இன்று விநாயகர் வழிபாடு தடைகளை அகற்றும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் சற்று கவனம் கொள்ளவும்.

சிம்மம்
சிம்மராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும். மாலையில் பிள்ளைகளுடன் கலந்து பேசி முக்கிய முடிவு எடுப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும். இன்று துர்கையை வழிபட காரியங்கள் அனுகூலமாகும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் வதந்திகளைப் பொருட்படுத்தாமல் இருப்பது நல்லது.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.

கன்னி
கன்னிராசி அன்பர்களே!

மனதில் இனம் தெரியாத குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்களால் ஓரளவு அனுகூலம் ஏற்பட்டாலும், அவர்களால் சில பிரச்னைகளும் ஏற்படக்கூடும். மாலையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்பு கொண்டு பேசுவது ஆறுதல் தரும். பிற்பகலுக்கு மேல் உற்சாகமாக இருப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனை யும் லாபமும் மந்தமாகத்தான் இருக்கும். முருகப்பெருமானை வழிபடுவது நலம் சேர்க்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பது தாமதமாகும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

துலாம்
துலாராசி அன்பர்களே!

மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படும். முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மாலையில் பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் சற்றுக் கூடுதலாக உழைக்கவேண் டியிருக்கும். இன்று மகாலட்சுமியை வழிபட பணலாபம் கிடைக்கும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்க வாய்ப்பு உள்ளது.

விருச்சிகம்
விருச்சிகராசி அன்பர்களே!

எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப் பார்கள். இன்று ஆஞ்சநேயரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சல் ஏற்படக்கூடும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.

தனுசு
தனுசுராசி அன்பர்களே!

உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. ஆனாலும், புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் வீண் பிரச்னைகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம் போலவே இருக்கும். இன்று லட்சுமி நரசிம்மரை வழிபடுவது நன்று.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் அனுகூலம் உண்டாகும்.

மகரம்
மகரராசி அன்பர்களே!

தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். அவசியத் தேவை இருந்தால் மட்டுமே தக்க முன்னேற்பாடுகளுடன் வெளியில் செல்லவும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருந்தாலும், பணியாளர் களால் செலவுகள் ஏற்படக்கூடும். இன்று மகாவிஷ்ணுவை வழிபடுவது நன்று.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

கும்பம்
கும்பராசி அன்பர்களே!

கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். சிலருக்கு இளைய சகோதரர்கள் மூலம் பணவிரயத்துக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்று.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணத்தின்போது கவனமாக இருக்கவும்.

மீனம்
மீனராசி அன்பர்களே!

எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணை நீங்கள் கேட்டதை வாங்கித் தருவார். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். நண்பர்களோடு பேசுவது மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். இன்று முருகப்பெருமானை வழிபட நன்மைகள் கூடுதலாகும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் கிடைக்கும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.