தியேட்டர்கள் திறக்கப்படுவது குறித்து வெளியான செய்தி! சினிமா ரசிகர்கள் குஷி – படப்பிடிப்புகள் என்னாச்சி?

கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டிவிட்டது. இறந்தவர்களோ 23 ஆயிரத்திற்கும் மேல். குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் இறப்புகளும் நிகழ்ந்துவருகின்றன.

இந்நிலையில் இன்னும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் முதலே சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. படப்பிடிப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால் சினிமா வட்டாரத்தினர் பலர் வேலையை இழக்க வறுமையை கருத்தில் கொண்டு சினிமா நடிகர்கள் நடிகைகள் தாராளமாக உதவி செய்தனர்.

சுகாதாரா நடவடிக்கையுடன் படப்பிடிப்பை நடத்த தயாரிப்பாளர்களும் தொடர்ந்து அரசிடம் அனுமதி கேட்டு வருகிறார்கள். அதே போல தியேட்டர் நிர்வாகத்தினரும் அனுமதி கோரி வருகிறார்கள்.

இந்நிலையில் தியேட்டர்களை சில பாதுகாப்பு நிபந்தனைகளுடன் திறக்கவும், அதற்கு அனுமதி அளிக்கவும் முடிவு செய்துள்ளதாம்.

மேலும் வயதானவர்கள், சிறியவர்களுக்கு அனுமதி கிடையாதாம். இருக்கைகளுக்குகிடையே இடைவெளிவிட்டும், கிருமி நாசினி, கை கழுவ சுத்திகரிப்பான் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளதாம்.

இதனால் ஆகஸ்ட் தேதி தியேட்டர்கள் திறக்கப்பட இருப்பதாகவும், படப்பிடிப்புகளும் அன்றைய தொடங்க வாய்ப்புள்ளதாம் தகவல் வெளியாகியுள்ளன.