தப்பித்தவறி கூட காலை உணவாக இதை சாப்பிடாதீங்க!

காலை உணவு என்பது ஒருநாளின் ஆரோக்கியமான தொடக்கத்திற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.

காலை உணவு எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு என்ன உணவை காலை உணவாக எடுத்துக்கொள்கிறோம் என்பதும் முக்கியமானது.

ஆரோக்கியமற்ற காலை உணவு உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். சில சமயல் உயிருக்கே உலை வைக்கும். அப்படியான சில உணவுகளை இப்போது பார்ப்போம்

சிட்ரஸ் பழங்கள்

காலை உணவிற்கு முன்னர் சிட்ரஸ் பழங்களை ஒருபோதும் சாப்பிடக்கூடாது. ஏனெனில் இதில் உள்ள அமிலத்தன்மை உங்கள் வயிற்றில் அமிலத்தன்மை மற்றும் வாயுக்கோளாறை உண்டாக்குமாம்.

இவற்றில் உள்ள பைபர் மற்றும் ப்ரெக்டொஸ் வெறும்வயிற்றில் எடுத்துக்கொள்ளும்போது செரிமானத்தின் வேகத்தை குறைக்கும். ஆரஞ்சு மற்றும் திராட்சை போன்ற பழங்களை காலை உணவிற்கு முன் எடுத்துக்கொள்ளவே கூடாது.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம், பைபர் மற்றும் மக்னீசியம் இருக்கிறது.

இதனால்தான் இதனை காலை உணவிற்கு முன் சாப்பிடக்கூடாது. அதிகளவு மக்னீசியம் இதை கோளாறுகளை உண்டாக்கக்கூடுமாம்.

பேரிக்காய்

காலை உணவிற்கு முன் பேரிக்காய் சாப்பிடுவது உங்கள் வயிற்றின் உட்புற சதைகளை பாதிக்கக்கூடும், அதற்கு காரணம் அதிலுள்ள அதிகளவு பைபர்.

வயிற்றின் உட்புற சவ்வானது மிகவும் மென்மையானது. இதனால் அதிகளவு பைபரை தாங்க இயலாது. காலை உணவுக்கு முன் பேரிக்காய் சாப்பிடுவது அல்சரை உருவாக்குமாம்.

தக்காளி

தக்காளியில் அதிகளவு டானிக் அமிலம் உள்ளது இது வயிற்றில் உள்ள அமிலத்தின் அளவை அதிகரிக்கிறது. மேலும் இதில் அதிகளவு வைட்டமின் சி உள்ளது இது நெஞ்செரிச்சல் மற்றும் வாயுக்கோளாறை உண்டாக்கும். எனவே காலை உணவிற்கு முன் தக்காளி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

தயிர்

தயிரில் உள்ள லெக்டோபேசிலஸ் உறையவைக்கும் பண்பு கொண்டது. இதில் உள்ள லாக்டிக் அமிலம் வயிற்றுக்கு நன்மைகளை வழங்கக்கூடியது.

காலை உணவிற்கு முன் தயிர் சாப்பிடும்போது இதில் உள்ள பாக்டீரியாக்கள் வயிற்றில் உள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை அழிக்கக்கூடுமாம்.

மேலும் இதனால் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்களும் கிடைக்கமால் போய் விடும்.