அமிதாப் பச்சனை தொடர்ந்து அவருடைய மகன் அபிஷேக் பச்சனுக்கு கொரொனா..!!

இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமான அமிதாப் பச்சனை தெரியாதவர்கள் யாருமில்லை. ஒட்டு மொத்த திரையுலகமும் இவர் சொல் கேட்கும்.

ஏன் ரஜினிகாந்தே என் ரோல் மாடல் அமிதாப் பச்சன் தான் என்று சொல்வார், அந்த அளவிற்கு செல்வாக்கு உள்ள நடிகர்.

இவர் சமீபத்தில் கொஞ்சம் உடல்நலம் முடியாமல் இருந்துள்ளார், உடனே மருத்துவர்களிடம் டெஸ்ட் செய்து பார்த்துள்ளார்.

அதில் இவருக்கு கொரொனா இருப்பது உறுதியாகியுள்ளது. அதோடு அதை அவரே தன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து அவருடைய குடும்பத்திற்கு கொரொனா டெஸ்ட் எடுக்கப்பட்டது.

இதில் நடிகர் மற்றும் அமிதாப் பச்சன் மகன் அபிஷேக் பச்சனுக்கு கொரொனா இருப்பது உறுதியாகியுள்ளது. இவை மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.