முதன்முறையாக OTT சீரிஸில் நடிக்கவுள்ள பிரபல முன்னணி நடிகர், கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..இயக்குனர் யார் தெரியுமா?

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமில்லாமல் சிறந்த நடிகராகவும் கருதப்படுபவர்.

மாஸ்டர், யாதும் ஊரே யாவரும் கேளிர், கடைசி விவசாயி என இவரின் அடுத்தடுத்த திரைப்படங்கள் லாக்டவுன் முடிந்தவுடன் வெளியாக உள்ளன.

மேலும் சமீபத்தில் இவர் நடிப்பில் இயக்குனர் தீனதயாளன் இயக்கத்தில் உருவான துக்ளக் தர்பார் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இவர் தற்போது புதிதாக உருவாகவுள்ள 2 OTT சீரிஸ்களில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டும் இல்லாமல் நடிகர் விஜய் சேதுபதி கூறும் படம் ஒன்றிலும் நடிக்கிறாராம். இதனை பேஜோய் நம்பியார் என்பவர் இயக்கவிருக்கிறாராம்.

மேலும் இவர் நடித்துள்ள கடைசி விவசாயி திரைப்படத்தை மட்டும், இந்த லாக்டவுன் சமயத்தில் 4 முறை பார்த்துவிட்டாராம்.