கார் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரு கார் வாங்கினால் இன்னொரு கார் இலவசம் என்ற விளம்பரத்தை கார் நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.

கடந்த 03 மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட ஊரடங்கு காரணமாக கார் விற்பனை முடங்கி விட்டது.

இதனால் கார் விற்பனையை அதிகரிக்க கவர்ச்சிகரமாக விளம்பரங்கள் கொடுத்தும் அவை வெற்றியளிக்கவில்லை.

இச்சூழ்நிலையில் தான் ஒரு கார் வாங்கினால் இன்னொரு கார் இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.

இந்த காரின் விலை இந்திய மதிப்பில் 38.64 இலட்சம் ஆகும். இதை விலைக்கு வாங்கினால் 10 இலட்சம் மதிப்புள்ள அல்லது 12 லட்சம் மதிப்புள்ள கார் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள்.

பிலிப்பைன்ஸில் இலட்சக் கணக்கில் சம்பளம் வாங்குவபர்களை குறி வைத்தே இந்த சலுகையை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.