இந்த நான்கு பேர் எனக்கு தெய்வங்கள்.. நெகிழ்ச்சியான வீடியோவை வெளியிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..

தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளாக தனது ஆதிக்கத்தை செலுத்தி முதன்மையாக திகழ்ந்து வருபவர் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்.

இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த எனும் படத்தில் நடித்து வருவதை நாம் அறிவோம்.

நடிகர் ரஜினிகாந்த் திரைத்துறையில் இயக்குனர் கே.பாலச்சந்தர் அவர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

இந்நிலையில் கே. பாலச்சந்தர் அவர்களின் 90 வது பிறந்த தினத்திற்காக சூப்பர் ஸ்டார் ரஜினி நெகிழ்ச்சியான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் அவர் குறிப்பாக கூறியிருந்த ஒரு விஷயம் ” தனது வாழ்வில் தன் அம்மா, அப்பா, சகோதரர் மற்றும் கே. பாலச்சந்தர் இவர்கள் நான்கு பேர் தன் என்னுடைய தெய்வம் ” என கூறியுள்ளார்.

மேலும் தற்போது இந்த நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் ரசிகர்களால் மிகவும் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..