இந்தியாவின் அனைத்து சாதனைகளையும் உடைத்தெறிந்த ராதே ஷயாம் பர்ஸ்ட் லுக்

பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றவர் முன்னணி நடிகர் பிரபாஸ்.

ஆம் பாகுபலி1, மற்றும் 2 படத்தின் மூலம் தனக்கென்று மாபெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

மேலும் இதன்பின் சாஹோ படத்தின் மூலம் மிக பெரிய வீழ்ச்சியையும் சந்தித்தார் பிரபாஸ். இப்படத்தின் மூலம் பல சர்ச்சைக்குரிய விமர்சனத்தை சந்தித்தார்.

இந்நிலையில் இவர் புதிதாக நடித்துள்ளார் ‘ ராதே ஷயாம் ‘ எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது.

அந்த டைட்டிலில் டுவிட்டரில் 6.3 மில்லியன் டுவிட்ஸ் வர, இந்தியாவின் நம்பர் 1 என்ற இடத்தை பிடித்துள்ளது. வேறு எந்த படத்திற்கும் முதல் நாளில் இத்தனை லட்சம் டுவிட்ஸ் வரவில்லையாம்.