மாஸ்டர் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க காரணமே இந்த நடிகர் தான்..!!

நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமில்லாமல் சிறந்த நடிகராகவும் கருதப்படுபவர்.

மாஸ்டர், யாதும் ஊரே யாவரும் கேளிர், கடைசி விவசாயி என இவரின் அடுத்தடுத்த திரைப்படங்கள் லாக்டவுன் முடிந்தவுடன் வெளியாக உள்ளன.

மேலும் சமீபத்தில் இவர் நடிப்பில் இயக்குனர் தீனதயாளன் இயக்கத்தில் உருவான துக்ளக் தர்பார் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தளபதி விஜய்க்கு வில்லனாக இவர் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தில், இவர் நடிக்க காரணமாக இருந்ததே இன்னொரு நடிகர் தான் என தெரியவந்துள்ளது.

ஆம் இவருடன் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும் மற்றும் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற திரைப்படங்களில் நடித்த நடிகர் சதிஷ் தான்.

நடிகர் விஜய் சேதுபதியிடம் இயக்குனர் லோகேஷ் மாஸ்டர் கதையை உங்களிடம் கூற தயக்கம் காட்டுவதாக கூறியுள்ளார்.

பின்னர் லோகேஷ் கூறிய கதாபாத்திரத்தில் கொஞ்சம் கூட நல்ல தன்மை இல்லை என்பதால் நடிகர் விஜய் சேதுபதிக்கு பிடித்து போய் இப்படத்தில் கமிட் ஆகியுள்ளார்.