கை மற்றும்‌ கால்‌ வலி குறைய எளிய வழிமுறைகள்…!!

கை மற்றும்‌ கால்‌ வலி குறைய:

வேலி பருத்தி சாறு, சுண்ணாம்பு கலந்து கை மற்றும்‌ கால்‌ வலியுள்ள இடத்தில்‌ தடவ வலி குறையும்‌.

சீந்தில்‌ கொடி இலைகளை பாலுடன்‌ கலந்து சாப்பிட்டு வர கை மற்றும்‌ கால்‌ வலி குறையும்‌.

கைமற்றும்‌ கால்‌ வலி குறைய ஒரு கைப்பிடி கருகைத்‌ தூள்‌ செய்து, திருகு கள்ளிச்சோறு கால்‌ படி எடுத்து நன்கு வதக்கி அதைச்‌ சூட்டுடன்‌ ஒத்தடம்‌ கொடுத்து அதையே வைத்து கட்டி வர வலி குறையும்‌.

கை மற்றும்‌ கால்‌ வலி குறைய ஒரு டம்ளர்‌ பால்‌ எடுத்து அதில்‌ 1 ஸ்பூன்‌ மருதாணி இலைச்சாறு, நல்லெண்ணெய்‌ கலந்து நன்குகாய்ச்சி கை மற்றும்‌ கால்களில்‌ தடவி வந்தால்‌ கை மற்றும்‌ கால்‌வலி குறையும்‌.

கை மற்றும்‌ கால்‌ வீக்கம்‌ குறைய:

கை மற்றும்‌ கால்‌ வீக்கம்‌ குறைய வெள்ளைச்‌ சாரணை வேர்‌, தேவதாரு(தேக்கு), மஞ்சள்‌, சித்திர மூலப்பட்டை, கடுக்காய்‌ தோல்‌, மர மஞ்சள்‌, சிறு தேக்கு, சீந்தில்‌ கொடி, சுக்கு ஆகியவற்றை தூளாக்கி ஒரு லிட்டர்‌ தண்ணிரில்‌ காய்ச்சி 120 மி.லி ஆகச்‌ சுண்ட வைத்து, மருந்துகளைக்‌ கசக்கிப்பிழிந்து வடிக்கட்டி ஒரு நாளைக்க இரண்டி வேளை எனச்‌ சாப்பிட்ரு வந்தால்‌ கை மற்றும்‌ கால்களில்‌ ஏற்படும்‌ வீக்கம்‌ குறையும்‌.

கைகால்‌ வலி குறைய:

நெல்லிக்காய்‌, முருங்கைக்காய்‌, முள்ளங்கி இவைகளை உணவில்‌ சேர்த்து வந்தால்‌ கைகால்‌ வலி குறையும்‌.

கைகால்‌ வலி குறைய தேனும்‌ இஞ்சி சாறும்‌ கலந்து சாப்பிடவும்‌.

கைகால்‌ வலி குறைய தூதுவளை இலையை அரைத்து சிறிதளவு எடுத்து பசும்பாலில்‌ கலந்து சாப்பிடவும்‌.

எட்டிக்‌ கொட்டையை இரண்டாகப்‌ பிளந்து வேப்பெண்ணையில்‌ போட்டுக்‌ காய்ச்சி வாசனை வந்ததும்‌ ஆறவிட்டு வலியுள்ள இடத்தில்‌ தடவி வர கைகால்‌ வலி குறையும்‌.

கால்‌ வலி குறைய:

கால்‌ வலி குறைய முருங்கை பட்டை, சுக்கு ஊற வைத்து அரைத்து பூசவும்‌.

கால்‌ வலிக்கு பூவரச இலையை வதக்கி வலியின்‌ மீது வைத்துக்‌ கட்ட வலி குறையும்‌.

பெருங்காயத்தை நல்லெண்ணையில்‌ சுடவைத்து இளம்‌ சூட்டுடன்‌ காலில்‌ தடவினால்‌ கால்‌ வலி குறையும்‌.

இஞ்சியை தண்ணீரில்‌ காய்ச்சி குடிக்க கால்‌ வலி குறையும்‌.

பிரண்டை சாறு எடுத்து அதில்‌ புளியும்‌, உப்பும்‌ சேர்த்துச்‌ சுண்டக்காய்ச்சி வலியின்‌ மேல்‌ தடவ கால்‌ வலி குறையும்‌.

கால்‌ வலி குறைய வாழைப்‌ பூவை விளக்கெண்ணெய்‌ விட்டு வதக்கி ஒத்தடம்‌ கொடுக்கவும்‌.