வன்கொடுமைக்கு பலியான சிறுமி ஜெயப்ரியாவின் குடும்பத்திற்கு உதவிய விஜய் ரசிகர்கள்..!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு அறந்தாங்கி அருகே ஜெயப்ரியா என்ற சிறுமி வன்கொடுமைக்கு பலியான சம்பவம் பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியது.

மேலும் இதுகுறித்து பல நடிகர்களும் நடிகைகளும் இந்த கொடூர சம்பவத்திற்கு காரணமான ராஜா என்பவருக்கு தகுந்த தண்டனை வழங்குமாறு பதிவிட்டு இருந்தனர்.

இந்நிலையில் தற்போது சிவகங்கை மற்றும் புதுக் கோட்டை மாவட்ட விஜய் ரசிகர்கள் மன்ற இயக்கத்தினர்.

சிறுமி ஜெயப்ரியாவின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று அவர்களுக்கு 50,000 ரூபாயை நிதியுதவியாக அளித்துள்ளனர். இதனை பலரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.

மேலும், இது போல் பல உதவிகளை அப்பகுதியை சார்ந்த மக்கள் இயக்கத்தினர் செய்து வருகின்றனர்.