வெறித்தனமா சாப்பிடுபவரா? தினமும் 2 கிளாஸ் இந்த டீ குடிச்ச ஒரே மாசத்துல 10 கிலோ குறைஞ்சிடலாம்?

டயட் என்றால் நாம் ஏதோ பெரிய கஷ்டமான விஷயம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் டயட் என்பதன் பொருள் என்னவென்றால் உணவுக் கட்டுப்பாட்டு முறை என்பது தான். இன்றைய காலகட்டத்தில் டயட்டுக்கா பஞ்சம். எக்கச்சக்க டயட்டுகள் இருக்கின்றன.

அதிலும் எடையைக் குறைப்பதற்கென்று மிலிட்டரி டயட், பேலியோ டயட், கீட்டோ டயட் என எக்கச்சக்க டயட்டுகள் மக்களால் பின்பற்றப்பட்டு வருகின்றன.

ஆனாலும் அவ்வளவு பெரிய ரிசல்ட் நிரந்தரமாகக் கிடைப்பதில்லை. அவர்களுக்கு ஒரு சிறந்த தீர்வாகவாகவும் அவர்களால் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஒரு மேஜிக்கல் மாற்றத்தை இந்த முயற்சி மட்டுமே ஏற்படுத்தும்.

உங்களுக்குப் பிடித்த எல்லாவற்றையும் சாப்பிடலாம். ஆனா இந்த டீயை மடடும் ஒரு நாளைக்கு 2 முதல் 3 முறை குடிங்க போதும். எப்பேர்ப்பட்ட பானை வயிறு ஒரே மாசத்துல குறைஞ்சு நீங்க சிக்குனு ஆயிடுவீங்க.

கருஞ்சீரக டீ தயாரிப்பது எப்படி?
தேவையான பொருட்கள்
  • கருஞ்சீரகம் – 2 ஸ்பூன்
  • புதினா – ஒரு கைப்பிடியளவு
  • இஞ்சி – 1 இஞ்ச் அளவு
  • தேன் – 2 ஸ்பூன்
செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் அளவுக்கு தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

தண்ணீர் சூடேறியதும் அதில் 2 ஸ்பூன் கருஞ்சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அப்படி கொதித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இஞ்சியைத் தோல் சீவி நன்கு நசுக்கி (தட்டி) அதில் போட வேண்டும்.

அதன்பின் அடுப்பை சிறு தீயில் குறைத்துக் கொண்டு, அதில் புதினா இலைகளையும் கொஞ்சம் ஒன்றிரண்டாக நசுக்கியோ கசக்கியோ அதில் போட்டு கொதிக்க விட வேண்டும். புதினா போட்டு இரண்டு நிமிடங்களில் அடுப்பை நிறுத்திவிட வேண்டும்.இப்போது டீ பாதி தயாராகிவிட்டது.

எப்படி பருகுவது

இதை வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு டம்ளர் டீக்கு அரை எலுமிச்சை போதுமானதான இருக்கும்.

அரை எலுமிச்சையை பிழிந்து விட்டு அதில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு கலக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் குடியுங்கள். அதேபோல் மாலையோ இரவிலோ இன்னொரு கிளாஸ் குடிக்க வேண்டும்.

காலையிலேயே மொத்தமாகப் போட்டு வைத்துக் கொண்டு, குடிக்கிற பொழுது மட்டும் எலுமிச்சை மற்றும் தேன் சேர்த்துக் கொள்ளலாம்.

முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. இதை சூடாக மட்டும் தான் குடிக்க வேண்டும். அதனால் ஏற்கனவே போட்டு வைத்த டீயை குடிப்பதாக இருந்தால் ஒவ்வொரு முறையும் சூடுபடுத்திக் குடிக்க வேண்டும்.

முக்கிய குறிப்பு

இந்த எடை குறைக்கும் பானத்தைக் குடிக்கும் காலங்களில் டீ, காபியை எக்காரணத்தைக் கொண்டும் குடிக்கக் கூடாது.