தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்படுபவர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள்..!!

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்படுபவர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளன.

நாட்டில் பெரும்பாலானோர் தனிமைப்படுத்தல் சட்டத்தை  தொடர்ந்து மீறி செயற்படுவதனால் மீண்டும் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்தே,  தனிமைப்படுத்தல் சட்டத்தை  மீறி  செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சுகாதார வழிமுறைகளின் முக்கிய அம்சங்களில் ஒன்றான முகக்கவசத்தை அணியாதவர்கள் இன்று முதல் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என  மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னக்கோன் குறிப்பிட்டுள்ளார்.