சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சித்தி.!

செங்கல் சூளையில் வைத்து 16 வயது சிறுமி ஒருவர் இரண்டு நாட்களாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பட்நாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் ஒரு பெண் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்து இருக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தாய் இல்லை. தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு இருக்கின்றார். சிறுமியின் சித்தி மிகவும் மோசமாக அவரிடம் நடந்து வந்துள்ளார். இதன் காரணமாக சிறுமி வீட்டை விட்டு ஓடி வந்துள்ளார்.

இந்த நிலையில் அந்தப் பெண்ணை செங்கல் சூளையில் வேலைக்கு அழைத்துச் செல்வதாக கூறி ரேணு தேவி என்ற பெண் அழைத்துச் சென்றுள்ளார். அப்பொழுது அந்த செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த மூன்று இளைஞர்கள் இரண்டு நாட்கள் வைத்து அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து இருக்கின்றனர்.

இது குறித்து சிறுமி காவல்துறையிடம் அளித்த புகாரின் பேரில் ரேணு தேவி உட்பட 7 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர். குற்றவாளிகள் 7 பேரில் 4 பேரை காவல்துறையினர் உடனடியாக கைது செய்தனர். மற்றவர்கள் தலைமறைவாக இருப்பதால் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.