நேருக்கு நேர் மோதிய வாகனம்.. ஸ்டண்ட் செய்த மூன்று இளைஞர்கள் துடிதுடித்து பலி.!!

இன்றுள்ள இளைஞர்களிடையே பெருமளவு இரு சக்கர வாகனத்தில் திரைப்பட காட்சிகளை போல ஸ்டண்ட் செய்யும் கலாச்சாரம் அதிகரித்துள்ளது. இதனால் பல சோக உயிரிழப்புகளும் தொடர்ந்து வருகிறது.

இதில் ஸ்டண்ட் செய்யும் இளைஞர்கள் முதல், அப்பாவி பொதுமக்கள் வரை பலரும் பரிதாபமாக உயிரிழந்து இருக்கின்றனர். இந்த நிலையில், பெங்களூரில் ஏற்பட்ட விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் விமான நிலைய சாலையில் இன்று காலை நேரத்தில் 3 இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்து திரைப்பட காட்சிகள் போல ஸ்டண்ட் செய்தனர்.

இந்த நிலையில், நெடுஞ்சாலையில் எதிர்திசையில் விதியை மீறி மற்றொரு இருசக்கர வாகனம் வந்த நிலையில், இரண்டு வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் எதிரில் வந்த வாலிபர் சில காயத்துடன் உயிர் தப்பினர்.

மேலும், ஸ்டண்ட் செய்த மூன்று வாலிபர்களும் பரிதாபமாக துடிதுடித்து சம்பவ இடத்தியிலேயே உயிரிழந்த நிலையில், இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.