தனியாக இருந்த சிறுமியை 3 சிறுவர்கள் சேர்ந்து செய்த செயல்..அதிர்ந்த மருத்துவர்..!!

தமிழகத்தில் உள்ள கோவையில் சுந்தாரபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு கூழித்தொழிலாளி மகள் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.

மனைவி இறந்து விட தன்னுடைய தங்கையுடன் சேர்ந்து மகளை வளர்த்து வருகிறார். இவர்களின் வீட்டின் கீழ்ப்பகுதியில் உரிமையாளரின் வீடு உள்ளது.

இதையடுத்து, அத்தை, தந்தை இருவரும் வேலைக்கு சென்று விடுவதால், சிறுமி கீழே சென்று டிவி பார்ப்பதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார்.

மேலும், வீட்டு உரிமையாளருக்கு சொந்த கடை இருப்பதால் அவர்களும் வீட்டில் இருக்க மாட்டார்கள். அவர்களின் 10-ம் வகுப்பு படிக்கும் மகன் மட்டும் வீட்டில் இருந்துள்ளார்.

ஆன்லைன் வகுப்புக்காக அந்த சிறுவனுக்கு பெற்றோர் ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளனர்.

ஆனால், அந்த மொபைலில் ஆபாச படம் பார்ப்பதை சிறுவன் வாடிக்கையாக வைத்திருந்து உள்ளார். அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு சிறுவனும் அவர் வீட்டிற்கு அடிக்கடி வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று, மே 20-ம் தேதி அன்று அந்த சிறுமி டிவி பார்க்க செல்லும்போது அவர்கள் இருவரும் சேர்ந்து ஆபாச படம் பார்த்துள்ளனர். சிறுமியையும் பார்க்க சொல்லி வற்புறுத்தி உள்ளனர்.

தொடர்ந்து அந்த சிறுமியை தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்து இதை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டி இருக்கின்றனர்.

அதே பகுதியில் உள்ள மற்றொரு சிறுவனையும் அழைத்து வந்து, ஆபாசப்படம் பார்த்துக்கொண்டே, மூன்று சிறுவர்களும் சிறுமியைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இது ஒரு வாரத்துக்குத் தொடர, சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி வந்துள்ளது. மருத்துவமனைக்குச் சென்றபோது, சிறுமி மருத்துவர்களிடம் அனைத்து விஷயங்களையும் கூறியுள்ளார்.

அதற்கு பிறகு தான் சிறுமியின் வீட்டினருக்கு இந்த விஷயம் தெரிய வந்துள்ளது. இதையடுத்து சிறுமி 3 சிறுவர்கள் மீதும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இதன் பின்னர் போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 2 சிறுவர்களை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

மேலும் ஒரு சிறுவனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.