சொந்த வீட்டில் ரூ.4 இலட்சம் திருடிய பெண்..!!

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நவிமும்பை பகுதியை சார்ந்த கட்டுமான அதிபர் மகேந்திர வேதா (வயது 48). இவரது இல்லத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ரூ.4 இலட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணம் மாயமாகியுள்ளது. மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டதாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அங்குள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்து இருந்தனர். இதில் மர்ம நபரின் முகம் மற்றும் நடமாட்டம் குறித்த பதிவுகள் இல்லாததால், மகேந்திர வேதா மற்றும் அவரது மனைவியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் மகேந்திர வேதாவின் மனைவி நகையை திருடியது அம்பலமாகியது.

மேலும், பணம் மற்றும் நகையை திருடிவிட்டு கொள்ளைபோனதாக நாடகமாடியதும், ரூ.3 இலட்சம் கடனை அடைக்க இந்த செயலில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து மகேந்திராவேதாவை கைது செய்த காவல் துறையினர், திருடிய நகையை மீட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.